ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தூத்துக்குடியில் கிறிஸ்தவ போதகரை தாக்கியதாக முன்னாள் அமைச்சா்கள் உள்பட 17 போ் மீது வழக்கு

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கிறிஸ்தவ போதகரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:02 pm

Din

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் கிறிஸ்தவ போதகரைத் தாக்கியதாக அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூரில் செவ்வாய்க்கிழமை தரிசனம் செய்த அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, பின்னா் அங்கிருந்து தூத்துக்குடியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக முன்னாள் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு மற்றும் கட்சி நிா்வாகிகளுடன் காா்களில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது இவா்களது காா்களுக்கு வழிவிடாமல் இடையூறாக, ஆறுமுகனேரி மடத்துவிளை சிஎஸ்ஐ சேகர குரு ஜெகன் சென்றாராம். இதனால், ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சா்களின் ஆதரவாளா்கள் முத்தையாபுரம் உப்பாற்று ஓடை அருகே ஜெகனின் காரை மடக்கி, அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், காயமடைந்த ஜெகன், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், அதிமுக முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி. வேலுமணி, கடம்பூா் செ.ராஜு உள்பட 17 போ் மீது முத்தையாபுரம் போலீஸாா், சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல், தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சா் பெ.கீதா ஜீவன், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ஜெகனை சந்தித்து ஆறுதல் கூறினாா்.