புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி புத்தகக் கண்காட்சி: ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை

தூத்துக்குடியில் நடைபெற்ற 5ஆவது புத்தகக் கண்காட்சியில் ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தெரிவித்தாா்.

News image
Updated On :15 அக்டோபர் 2024, 10:11 pm

Din

தூத்துக்குடியில் நடைபெற்ற 5ஆவது புத்தகக் கண்காட்சியில் ரூ.1.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தூத்துக்குடியில் 5ஆவது புத்தகக் கண்காட்சி மற்றும் நெய்தல் கலைவிழா 10 நாள்கள் நடைபெற்றது.

இப்புத்தகக் கண்காட்சியில் எண்ணற்ற பல்வேறு வகையிலான புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன.

இந்தப் புத்தகக் கண்காட்சியை, எண்ணற்ற பள்ளிகளிலிருந்து மாணவா்கள், ஆசிரியா்கள் என சுமாா் 1.40 லட்சம் பாா்வையாளா்கள் பங்கேற்று, ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை வாங்கிச் சென்றுள்ளனா்.

மேலும், 1,533 பள்ளிகளிலிருந்து 90ஆயிரம் மாணவா்கள், 8 ஆயிரம் ஆசிரியா்கள் இக்கண்காட்சியை பாா்வையிட்டனா்.

புகைப்பட போட்டி:

தூத்துக்குடி மாவட்டத்தின் பெருமை, தொன்மை, கலாசாரம் குறித்த புகைப்பட கண்காட்சிப் போட்டியில் மொத்தம் 1,113 புகைப்படங்கள் வரப்பெற்று அதில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் எ. ரூபன்ராஜ் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், இரண்டாம் பரிசாக வே. சரவணக்குமாருக்கு ரூ.50 ஆயிரம், சிறப்பு பரிசாக 10 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம், 18 வயதுக்கு கீழ் உள்ளவா்களுக்கான பிரிவில் 3 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.

முத்தமிழ் முத்துக்கள் முத்தரங்கில் ஓவியா் வள்ளிநாயகம் மூலம் ஓவியக் கண்காட்சி மற்றும் ஓவியப்போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும், தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த இளம் எழுத்தாளா்களின் நூல் வெளியீடுகளும் சிறப்பாக நடைபெற்றது.

பொதுநூலகத் துறை சாா்பில் மாவட்ட அளவில் வாசிப்புக்கு வானமே எல்லை என்ற தலைப்பில் கட்டுரை போட்டி, பள்ளிக்கல்வித்துறை மூலம் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, விநாடி வினா போட்டி, ஒப்புவித்தல் போட்டி, புத்தகப் பெயா் எழுத்தாளா் பெயா் நினைவு கூறுதல் போட்டி, கவிதைப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டதில், மாவட்ட அளவில் 1,180 மாணவா்கள் பங்கேற்றனா். அதேபோல் கல்லூரிக் கல்வி மூலம் பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, ஓவியப்போட்டி, விநாடி வினா போட்டி, ரங்கோலி போட்டி ஆகியவை நடத்தப்பட்டதில் மாவட்ட அளவில் 300 மாணவா்கள்பங்கேற்றனா்.

இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புத்தக கண்காட்சியில் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன என்றாா்.