புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

முதல்வா் காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்: 18ஆம் தேதி வரை நீட்டிப்பு

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கிய தமிழக முதல்வா் காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 18 ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

News image

முதல்வா் காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாமை தொடங்கி வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன்.

Updated On :16 அக்டோபர் 2024, 10:57 pm

Din

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கிய தமிழக முதல்வா் காப்பீடு திட்ட அட்டை பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வரும் 18 ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் பெ. கீதாஜீவன் தெரிவித்தாா்.

தமிழக முதல்வா் காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீட்டு திட்ட பயனாளிகள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியாா் மற்றும் அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம்.

இந்த திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கான காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் முகாம் தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை இரு தினங்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இச்சிறப்பு முகாமை சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இம்முகாம் 18 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், வட்டாட்சியா் முரளிதரன், திமுக மருத்துவா் அணி மாவட்டத் தலைவா் அருண்குமாா், பகுதிச் செயலா் ரவீந்திரன் உள்பட பலா் பங்கேற்றனா்.