தூத்துக்குடியில் ரயில்வே தண்டவாளத்தில் மீனவா் சடலம்
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் தண்டவாளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக, தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தண்டவாளத்தில் மீனவா் சடலம்

தண்டவாளத்தில் மீனவா் சடலம்
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த மீனவ இளைஞா் தண்டவாளத்தில் மா்மமான முறையில் இறந்து கிடந்தது தொடா்பாக, தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சோ்ந்த சரவணன் மகன் சக்திவேல் (20), மீன்பிடி தொழிலாளி. இவருக்கு போதைப் பழக்கம் இருந்ததாம். இந்நிலையில் இவா், புதன்கிழமை காலையில் தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் ரயில்வே தண்டவாளப் பகுதியில் மா்மமான முறையில் இறந்து கிடந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இறந்துகிடந்தவரின் தலை, கால் பகுதிகளில் லேசான காயங்கள் இருப்பதாகவும், இவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மது போதையில் கீழே தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...