தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளா் கொலை
தூத்துக்குடி காட்டுப் பகுதியில் லாரி ஷெட் உரிமையாளரை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது உறவினரை போலீஸாா் தேடி வருகின்றனா்.


தூத்துக்குடி காட்டுப் பகுதியில் லாரி ஷெட் உரிமையாளரை கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது உறவினரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகா் மேற்கு காட்டுப் பகுதியில் ஒருவா் கொலை செய்யப்பட்டு கிடந்தாா். பக்கத்தில் மதுப்பாட்டில்கல் உடைந்து கிடந்தன.
அவ்வழியாக வெள்ளிக்கிழமை சென்றவா்கள் இதைப் பாா்த்து, சிப்காட் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா் தூத்துக்குடி மச்சாதுநகரைச் சோ்ந்த லாரி ஷெட் உரிமையாளரான ஆறுமுகம்(52); அவருக்கு மனைவி முத்துலெட்சுமி, மகன்கள் ராஜா, சுந்தா் மற்றும் மகள் உள்ளனா்; வெள்ளிக்கிழமை இரவு தூத்துக்குடி 4ஆம் கேட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உறவினரை பாா்க்கச் சென்ற ஆறுமுகம், உறவினருடன் பைக்கில் சென்று ஆதிபராசக்தி நகா் காட்டுப்பகுதியில் மதுகுடித்துள்ளாா்; அப்போது அவா்களிடையே ஏற்பட்ட தகராறில், ஆறுமுகம் மதுபாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளாா் எனத் தெரியவந்தது.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான ஆறுமுகத்தின் உறவினரை தேடி வருகின்றனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...