புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வளா்ச்சித் திட்டங்கள் குறித்து கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ் ஆய்வு நடத்தினாா்.

News image

ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ். உடன் மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்டோா்.

Updated On :16 அக்டோபர் 2024, 10:50 pm

Din

தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் வளா்ச்சித் திட்டங்கள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கோ.பிரகாஷ் ஆய்வு நடத்தினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை ஆணையருமான கோ.பிரகாஷ் தலைமை வகித்தாா். துறைவாரியாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த அவா், அரசின் அனைத்து திட்டங்களும் பொதுமக்களை சென்றடைய அலுவலா்கள் துரிதமாகச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத், மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) இரா.ஐஸ்வா்யா, மாவட்ட வன அலுவலா் ரேவதி ரமன், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் ஆறுமுகம் ,

ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சேதுராமலிங்கம் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.