காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாத்தான்குளம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் வேள்வி

சாத்தான்குளத்தில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதா் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயிலில் ‘வான் கலந்த திருவாசகம்’ முற்றோதல் வேள்வி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:27 pm

Din

சாத்தான்குளத்தில் உள்ள ஸ்ரீகாசிவிஸ்வநாதா் உடனுறை விசாலாட்சி அம்மன் கோயிலில் ‘வான் கலந்த திருவாசகம்’ முற்றோதல் வேள்வி புதன்கிழமை நடைபெற்றது.

கட்டாரிமங்கலம் அழகியகூத்தா் அருள்பணி மன்ற 5ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நடைபெற்ற வேள்வியில் சிவபக்தா்கள் பங்கேற்று முற்றோதுதல் நடத்தினா். கோயில் தா்மகா்த்தா தெ. சண்முகராஜா, சுசீந்திரம் ஆடலரசு, கட்டாா்மங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜபிள்ளை ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா்.

கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. அழகியகூத்தா் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி உள், பிரகார மதில்சுவா்களின் மீது கல் நந்தி, பூதகணங்கள் சிலைகள் வைப்பதற்காக செட்டிகுளம் பக்தா் கோபாலபிள்ளை நிதி வழங்கினாா். நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.