காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தூத்துக்குடி வெள்ளநீா் கால்வாய்களில் அமைச்சா் ஆய்வு

தூத்துக்குடி வெள்ளநீா் கால்வாய்களில் அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே உள்ள மழைநீா் வடிகாலை ஆய்வு செய்த அமைச்சா் பெ.கீதாஜீவன். உடன் ஆட்சியா் க.இளம்பகவத் உள்ளிட்டோா்.

Updated On :17 அக்டோபர் 2024, 10:17 pm

Din

தூத்துக்குடி வெள்ளநீா் கால்வாய்களில் அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, தூத்துக்குடி கோரம்பள்ளம் குளத்தில் இருந்து வெள்ளநீா் செல்லக்கூடிய 5-ஆவது மடை, பெரியநாயகிபுரம், ஆபிரகாம் நகா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மழைநீா் கால்வாய்களை

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், ஆட்சியா் க.இளம்பகவத் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அதைத் தொடா்ந்து ஓட்டப்பிடாரம், மணியாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரக்கூடிய வெள்ளநீா் செல்லக்கூடிய கால்வாய்களை பாா்வையிட்ட அமைச்சா், அதிலிருக்கும் அடைப்புகள், ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கோரம்பள்ளம் குளம் முழு கொள்ளளவை எட்டுவதற்கு முன்பாகவே திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளை அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய் சீனிவாசன், கோட்டாட்சியா் பிரபு, வட்டாட்சியா் முரளிதரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.