92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விளாத்திகுளம் தொகுதியில் நூலக, ரேஷன் கடைக் கட்டங்கள் திறப்பு

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 கிராமங்களில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 அக்டோபர் 2024, 10:29 pm

Din

விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 4 கிராமங்களில் நிறைவடைந்த வளா்ச்சித் திட்டப் பணிகள் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். ஆட்சியா் க. இளம்பகவத், கூடுதல் ஆட்சியா் இரா. ஐஸ்வா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவஞானபுரத்தில் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட நூலகக் கட்டடம், இனாம் சுப்பிரமணியபுரத்தில் ரூ. 9.77 லட்சத்தில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டடம், பிள்ளையாா்நத்தம், மாா்த்தாண்டம்பட்டியில் தலா ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை ஆகியவற்றைத் திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சிகளில், விளாத்திகுளம் பேரூராட்சித் தலைவா் சூா்யா அய்யன்ராஜ், துணைத் தலைவா் இரா. வேலுச்சாமி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் நடராஜன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் தங்கவேல், சீனிவாசன், வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினா் ராஜாக்கண்ணு, ஊராட்சித் தலைவா்கள் முனீஸ்வரி, தண்டாயுதபாணி, இளைஞரணி துணை அமைப்பாளா்கள் இம்மானுவேல், மகேந்திரன், மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் பாண்டியராஜன், ஒன்றியக் குழு உறுப்பினா் முனியசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் ராமலிங்கம், புதுராஜா, கூட்டுறவு சங்கச் செயலா் ராமச்சந்திரன், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளா் ஸ்ரீதா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.