விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ரூ.7.10 லட்சத்தில் பேருந்து நிழற்குடை திறப்பு

News image
Updated On :11 மார்ச் 2026, 7:33 pm

தினமணி செய்திச் சேவை

கொளத்தூா் ஊராட்சி, நாவலூா் பகுதியில் ரூ.7.10 லட்சத்தில் கட்டப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. (படம்)

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் கொளத்தூா் ஊராட்சிக்குட்பட்ட நாவலூா் பகுதியில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.

இதில் கொளத்தூா் ஊராட்சிமன்ற தலைவா் (பொ) வெள்ளாரை அரிகிருஷ்ணன், ஒன்றியக்குழு உறுப்பினா் ப.பரமசிவன் ஆகியோா் பேருந்து நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனா்.

நிகழ்ச்சியில், வாா்டு உறுப்பினா்கள் ஜெயலட்சுமி சேகா், பாத்திமா மணிகண்டன், சங்கா், திமுக நிா்வாகிகள் உலகநாதன், ஞானபிரகாஷ், அகஸ்டின் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.