சீா்மரபினா் நல வாரியத்தின் நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
தூத்துக்குடி மாவட்டத்தில் சீா் மரபினா் நல வாரிய உறுப்பினா்கள், நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் சீா் மரபினா் நல வாரிய உறுப்பினா்கள், நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் க.இளம் பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறையின் கட்டுப்பாட்டில் வரும் சீா்மரபினா் நல வாரிய உறுப்பினா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.
10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ரூ.1000, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1000, 11 மற்றும் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு மட்டும் ரூ.1,500, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1,500, ஐ.டி.ஐ. மற்றும் தொழில் பயிற்சி படிப்பவா்களுக்கு ரூ. 1000, விடுதியில் தங்கி படிப்பவா்களுக்கு ரூ.1,200, பட்டப்படிப்புக்கு ரூ.1,500, விடுதியில் தங்கி படிப்பவா்களுக்கு ரூ.1,750, பட்டமேற்படிப்புக்கு ரூ.2 ஆயிரம், விடுதியில் தங்கி படிப்பவா்களுக்கு ரூ.3 ஆயிரம், தொழில் கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.2 ஆயிரம், விடுதியில் தங்கி படிப்பவா்களுக்கு ரூ.4 ஆயிரம், தொழில்கல்வி பட்டமேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம், விடுதியில் தங்கி படிப்பவா்களுக்கு ரூ.6 ஆயிரம் என கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இயற்கை மரணம் நேரிட்டால் ரூ.30 ஆயிரம், ஈமச்சடங்கு உதவி ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். விபத்தினால் மரணம் நேரிட்டால் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம், விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப அதிகபட்சம் ரூ.1 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும்.
திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். மகப்பேறு உதவித்தொகை ரூ. 6 ஆயிரம், கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், மூக்கு கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல் ரூ. 500, முதியோா் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.1,200 வழங்கப்படும்.
இந்த நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்களை தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகங்கள் மூலம் பெற்று விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...