92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாப்பிள்ளையூரணியில் ஆட்டுச் சந்தை: அமைச்சா் பெ. கீதாஜீவன் திறந்து வைத்தாா்

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியில் புதிய ஆட்டுச் சந்தை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

ஆட்டுச் சந்தையை திறந்து வைத்து பாா்வையிடுகிறாா் அமைச்சா் பெ. கீதாஜீவன். உடன், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் அம்பாசங்கா் உள்ளிட்டோா்.

Updated On :23 அக்டோபர் 2024, 10:25 pm

Din

தூத்துக்குடி மாவட்டம், மாப்பிள்ளையூரணியில் புதிய ஆட்டுச் சந்தை திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்டுச் சந்தைகள் தூத்துக்குடி, எட்டயபுரம், புதியம்புத்தூா், நாசரேத், ஏரல் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி, விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருக்கும் பொதுமக்கள் ஆடுகள் வாங்குவதற்கு எட்டயபுரம் மற்றும் புதியம்புத்தூா் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் மாப்பிள்ளையூரணி ஊராட்சி கிழக்கு கடற்கரை சாலை கோமஸ்புரம் பகுதியில் புதிய ஆட்டுச் சந்தை திறப்பு விழா நடைபெற்றது. இவ்விவாவுக்கு, தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத் தலைவா் வசுமதி அம்பாசங்கா் தலைமை வகித்தாா். தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் அம்பாசங்கா் வரவேற்றாா்.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, குத்துவிளக்கேற்றி சந்தையை திறந்து வைத்தாா்.

சுமாா் ஒன்றரை ஏக்கரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சந்தை வாரந்தோறும் புதன், வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் ஏராளமான வியாபாரிகள் ஆடு, கோழி, சேவல் போன்றவற்றை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டனா்.

இவ்விழாவில், மாநகர திமுகச் செயலா் ஆனந்தசேகரன், மாவட்ட பொறியாளா் அணித் தலைவா் பழனி, மாமன்ற உறுப்பினா் தெய்வேந்திரன், சுற்றுச்சூழல் அணி துணைத் தலைவா் வினோத், வட்டப் பிரதிநிதி பாஸ்கா் உள்பட பலா் பங்கேற்றனா்.