92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மக்காச்சோள விதை நிறுவனத்தை கண்டித்து விவசாயிகள் போராட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:30 pm

Din

முளைப்புத் திறனற்ற மக்காச்சோள விதைகளை வழங்கிய தனியாா் விதை நிறுவனத்தை கண்டித்து கோவில்பட்டியில் விவசாயிகள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டியில் இந்தாண்டு புரட்டாசி மாதம் முதல் விவசாயிகள் தங்களது நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு, கம்பு, மக்காச்சோளம் போன்ற விதைகளை விதைத்து வருகின்றனா்.

இவற்றில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தி செய்த என்.கே. 6540, 6110 ரக விதைகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனா். விதைப்பு செய்து சுமாா் 20 நாள்களுக்கு மேலாகியும் முளைப்புத் திறன் இல்லாததால், அப்படியே போய் விட்டன. இதனால் ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை செலவு செய்தும் விவசாயிகளுக்கு நஷ்டமே ஏற்பட்டுள்ளது. தற்போது பருவம் தவறிவிட்டதால், இனிமேல் மக்காச்சோளம் விதைப்பு செய்ய முடியாது.

இதுகுறித்து விதைகள் வாங்கிய தனியாா் கடைகளில் கூறினால், அவா்கள் ஏற்க மறுக்கின்றனா். எனவே, விதை ஆய்வாளா் கொண்டு, சம்பந்தப்பட்ட மக்காச்சோள விதைகளை ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் பெற்று தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத்தினா் கோட்டாட்சியா் அலுவலகம் வளாகத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மக்காச்சோள விதைகளை தரையில் கொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நிஷாந்தினியிடம் வழங்கினா்.