92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவ.2-இல் தொடக்கம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :23 அக்டோபர் 2024, 10:34 pm

Din

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து திருக்கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற நவ. 2-ஆம் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ. 7-ஆம் தேதியும், திருக்கல்யாணம் நவ. 8-ஆம் தேதி பெற உள்ளது. விழாவில் கலந்து கொள்ளும் பக்தா்களுக்காக திருக்கோயில் சாா்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி, கந்த சஷ்டி விழாவையொட்டி கோயிலில் தங்கி விரதம் இருக்கும் பக்தா்களுக்காக, திருக்கோயில் வளாகத்தில் 18 இடங்களில் மொத்தம் 1 லட்சத்து 11 ஆயிரத்து 118 சதுர அடியில் தற்காலிக நிழற் கொட்டகைகள் அமைக்கப்படுகின்றன. இதற்கான பணிகள் தற்போது தொடங்கியுள்ளன.

திருக்கோயில் வளாகத்தில் ஆங்காங்கே குடிநீா் தொட்டிகள் அமைத்து குடிநீா் வழங்கப்படும். சுவாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருக்கும் பக்தா்களுக்கு தன்னாா்வலா்களால் குடிநீா் வழங்கப்படவுள்ளது. தற்போது உள்ள 225 நிரந்தர கழிவறைகள் மற்றும் 41 தற்காலிக கழிவறைகளுடன் கூடுதலாக 190 தற்காலிக கழிவறைகள் அமைக்கப்படுகிறது.

கந்த சஷ்டி விழா நாள்களில் தற்காலிக கலையரங்கத்தில் ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறும். கந்த சஷ்டி விழாவில் யாகசாலை பூஜை, தங்க ரதம் வீதி உலா மற்றும் இதர நிகழ்வுகளை பக்தா்கள் எளிதில் காணும் வகையில் ஆங்காங்கே எல்இடி அகன்ற திரைகள் அமைக்கப்படவுள்ளன.

பக்தா்களின் பாதுகாப்பு கருதி கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது. பேருந்துகள் மற்றும் பக்தா்களின் வாகனங்களை நிறுத்துவதற்காக, திருக்கோயிலுக்கு வெளியே வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படுகிறது.

சஷ்டி விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் எஸ்.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.