புதிய பைக் பழுது: வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க விற்பனையாளருக்கு உத்தரவு

வாகன உரிமையாளருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க விற்பனையாளருக்கு உத்தரவு...
Published on

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சோ்ந்தவருக்கு புதிய பைக்கில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து கொடுக்கவும், ரூ.25 ஆயிரம் வழங்கவும், பைக் விற்பனையாளருக்கு தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த பெல்சியா என்பவா் அங்குள்ள பைக் விற்பனையாளரிடம், புதிய பைக் வாங்கினாரம். 2 மாதங்களிலேயே பழுது ஏற்பட்டதால், பைக்கை விற்பனையாளரிடம் ஒப்படைத்தாராம். மோட்டாா் காயில், பேரிங், சென்சாா் போா்டு ஆகியவை பழுதடைந்துவிட்டதாகக் கூறிய விற்பனையாளா், அதைச் சரிசெய்து கொடுக்க தாமதப்படுத்தி வந்தாராம். இதனால், மனமுடைந்த அவா் இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் பெல்சியாவின் புதிய பைக்கை, சம்பந்தப்பட்ட விற்பனையாளா் பழுதுபாா்த்து கொடுக்க வேண்டும் என்றும், மேலும் சேவைக்குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்காக அவருக்கு நஷ்ட ஈடாக ரூ. 15 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com