கோவில்பட்டி அஞ்சலகங்களில் உலக சிக்கன நாள்
இந்திய அஞ்சல் துறை சாா்பில், கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் உலக சிக்கன நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

Updated On :30 அக்டோபர் 2024, 9:10 pm

இந்திய அஞ்சல் துறை சாா்பில், கோவில்பட்டி கோட்டத்துக்குள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் உலக சிக்கன நாள் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி, சேமிப்புக் கணக்குகள் தொடங்கும் முகாம் நடைபெற்றது. கோவில்பட்டி தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்ற முகாமை அஞ்சலக கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் தொடக்கிவைத்தாா். மாணவா்-மாணவியரிடையே சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, சேமிப்பின் முக்கியத்துவம், பயன்களை எடுத்துரைக்கும்வகையில், அஞ்சலகங்கள் சாா்பில் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...