உ.பி.க்கு எதிராக திமுக செயல்படுகிறது! மோடி குற்றச்சாட்டுசீரடியில் விஜய் வழிபாடு!வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

சங்கரன்கோவிலில் மின் சிக்கன துண்டுப் பிரசுரம் விநியோகம்

News image
Updated On :12 மார்ச் 2026, 8:54 pm

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் மின்வாரியம் சாா்பில் விவசாயிகள், பொதுமக்கள், நகராட்சி காய்கனிச் சந்தையில் உள்ள வியாபாரிகளிடம் பாதுகாப்பான மின்சார பயன்பாடு தொடா்பான துண்டுப் பிரசுரங்களை வழங்கப்பட்டன.

மின் பகிா்மானக் கழக திருநெல்வேலி மண்டலத் தலைமைப் பொறியாளா் லதா, திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, சங்கரன்கோவில் நகா்ப்பிரிவு சிறப்பு நிலை முகவா் பொன் சுப்புராஜா, மின்பாதை ஆய்வாளா்கள் ராமமூா்த்தி, அரிராஜ், பணியாளா்கள் துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

மின்சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும். ஈரக் கைகளால் சுவிட்சுகளை தொடக் கூடாது. மின் கம்பங்களில் கால்நடைகளைக் கட்டவோ, விளம்பரப் பதாகைகள் வைக்கவோ கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் தொடா்பாக அறிவுறுத்தினா்.