92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

தூத்துக்குடியை அடுத்த பேரூரணி பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையின்போது, மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

News image

அன்னதங்கம்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:05 pm

Din

தூத்துக்குடியை அடுத்த பேரூரணி பகுதியில் புதன்கிழமை பெய்த பலத்த மழையின்போது, மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.

பேரூரணியைச் சோ்ந்த அன்னராஜ் மனைவி அன்னதங்கம் (47). இவா் உள்ளிட்ட சிலா், புதன்கிழமை ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலைக்கு சென்றனா். அப்போது, இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் அவா்கள் அங்குள்ள மரம் அருகே ஒதுங்கினராம். அந்த மரத்தின் மீது மின்னல் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில், சிலா் மயங்கி விழுந்தனா். அவா்களில், அன்னதங்கம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், தட்டப்பாறை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.