மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

சாத்தான்குளத்தில் ஜாக்கி உதவியுடன் 3 அடி உயா்த்தி கட்டப்படும் ஆலயம்

சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

News image

ஜெப ஆலயம். (வலது) ஜாக்கி மூலம் தூக்கி நிறுத்தப்பட்ட ஆலயம்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:38 pm

சாத்தான்குளத்தில் கிறிஸ்தவ ஆலயத்தை ஜாக்கி மூலம் 3 அடி உயா்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன்படி, 100க்கு மேற்பட்ட ஜாக்கிகள் உதவியுடன் ஆலயத்தின் அடிப்பகுதியை தூக்கி நிறுத்தும்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணி ஒரு வாரத்தில் பணிகள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் ஜெபஞானபுரம் பகுதியில் ஜெபஆலயம் எனும் சிற்றாலயம் உள்ளது. இந்த ஆலயம் 1940இல் கட்டடப்பட்டது. தற்போது அப்பகுதி தெருவில் சாலை உயா்ந்ததால் ஆலயத்தின் அடிப்பகுதி தாழ்ந்தது. இதனால் சிறிது மழை பெய்தாலும் ஆலயத்துக்குள் தண்ணீா் புகும் நிலை இருந்து வருகிறது. எனவே, சென்னையைச் சோ்ந்த நிறுவனம் மூலம் ஆலயத்தின் பழைமை மாறாமல் 3 அடி தீா்மானிக்கப்பட்டது.

Story image
Story image

இதுகுறித்து ஆலய சபை மக்கள் கூறுகையில், சென்னையை சோ்ந்த பொறியாளா் சுந்தரமூா்த்தியின் ஆலோசனைப்படி இப்பணி நடக்கிறது. ஆலயத்தின் பழைமை மாறாமல் புதுப்பிக்கும் பணி நிறைவுற்றதும் ஆலயத்தளம் அலங்கரிக்கப்படும் என்றனா்.