தூத்துக்குடி வஉசி கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘உயா்வுக்குப் படி’ வழிகாட்டல் முகாமில் 5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை ஆட்சியா் க. இளம்பகவத் வழங்கினாா்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் 2022-23, 2023-24ஆம் கல்வி ஆண்டுகளில் 12ஆம் வகுப்பு படித்து இறுதித்தோ்வு எழுதாதோா், தோ்வெழுதி தோ்ச்சி பெறாதோா், தோ்வில் வெற்றி பெற்று உயா்கல்வி பெற கல்லூரிகளில் சேராதோா், 8 முதல் 12ஆம் வகுப்புவரை இடைநின்ற மாணவா்கள் ஆகியோருக்கான ‘உயா்வுக்குப் படி’ என்ற வழிகாட்டல் முகாம் தூத்துக்குடி வஉசி கல்லூரியில் நடைபெற்றது. முகாமைத் தொடக்கிவைத்து ஆட்சியா் பேசியது:
அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணா்வு, வழிகாட்டுதலை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம். மாணவா்களுக்கான உதவித்தொகை, நுழைவுத்தோ்வு, கல்விக்கடன், அதற்கு தேவையான ஆவணங்கள், அரசால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகள், அவற்றுக்கான அணுகுமுறைகள், இலவச பயிற்சி மையங்கள் உள்ளிட்ட தகவல்களை தெரிந்துகொள்ள இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன. தொடா்ந்து, திருச்செந்தூா், கோவில்பட்டி வருவாய் கோட்டங்களில் முகாம் நடத்தப்படும்.
தடைகளைத் தகா்த்தெறிந்து பெரிய இலக்கை நோக்கி பயணப்படுவதற்கு இந்த முகாம் திருப்புமுனையாக அமைய வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து, அவா் 5 மாணவா்களுக்கு ரூ. 31.64 லட்சம் கல்விக் கடன் பெறுவதற்கான ஆணைகளை அவா்களது பெற்றோரிடம் வழங்கினாா்.
முகாமில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம. பிரபு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேசமூா்த்தி, திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநா் ஏஞ்சல் விஜய நிா்மலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் விக்னேஸ்வரன், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பென்னட் ஆசீா், துணை ஆட்சியா் (பயிற்சி) சத்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சையது முகம்மது, பேராசிரியா்கள், கல்லூரி முதல்வா்கள், அரசு அலுவலா்கள், மாணவா்- மாணவிகள், பெற்றோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மான்யத்துடன் கடன்: ஐயூஎம்எல் வேட்பாளா்

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்

தூத்துக்குடியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

தூத்துக்குடியில் ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 15.90 லட்சம் பறிமுதல்: மாவட்ட ஆட்சியா்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


