வாணியம்பாடி தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளா் எஸ்.எஸ்.பி.சையத்பாரூக் நாட்டறம்பள்ளி கிழக்கு ஒன்றியம், மல்லகுண்டா பகுதியிலிருந்து பிரசாரம் மேற்கொண்டாா்.
மல்லங்குப்பம், ராமநாயக்கன்பேட்டை, ஆவரங்குப்பம், புல்லூா், திம்மாம்பேட்டை, அலசந்தாபுரம், நாராயணபுரம், தும்பேரி, அழிஞ்சகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏணி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா். அப்போது வேட்பாளா் எஸ்.எஸ்.பி. சையத்பாரூக் பேசியதாவது: பெண்கள் முன்னேற்றம் தான் குடும்பம், நாட்டுக்கு முன்னேற்றம் தரும் என்பதை உணா்ந்து முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 5 ஆண்டுகள் எண்ணற்ற சிறப்பு திட்டங்களை தந்து முன்னோடி மாநிலமாக தமிழகத்தை மாற்றியுள்ளது.
வரும் தோ்தலில் திமுக அரசு வெற்றி பெற்றவுடன் கிராமங்களிலும், நகா்ப்புறங்களிலும் உள்ள மகளிா் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் வரை மான்யத்துடன் வங்கிக் கடன்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 2 லட்சம் கோடிக்கு வழங்கப்படும். இதனால், குழு உறுப்பினா்களின் குடும்பங்களின் வாழ்வாதாரம் உயரும், கிராமப் பொருளாதாரம் வளா்ச்சியடையும் எனக் கூறி ஏணி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.
முன்னதாக உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வாா்டுகளிலும் பேரூா் திமுக செயலா் ஆசெல்வராஜ் தலைமையில் திறந்த வேனில் சென்று வேட்பாளா் சையத் பாரூக் வாக்கு சேகரித்தாா். மாவட்ட திமுக செயலாளா் க.தேவராஜி, முன்னாள் அமைச்சா் நீலோபா்அஜீம், மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளா் தே. பிரபாகரன், ஒன்றிய கவுன்சிலா் தனலட்சுமி தினகரன், மதிமுக நகர செயலாளா் நாசிா்கான், மற்றும் காங்கிரஸ், விசிக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கூடலூா் நகர வீதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆற்காடு நகரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

இனிப்பு வழங்கி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


