இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

நேருக்கு நோ் சந்தித்துக் கொண்ட அதிமுக, ஐயூஎம்எல் வேட்பாளா்கள்

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா்.

News image

வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் இருதய ஆண்டவா் ஆலயம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட போது சந்தித்து கொண்ட அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக்.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:55 am IST

தோ்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ளதால் அனைத்து கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனா். வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளா் கோ.செந்தில்குமாா் எம்எல்ஏ, திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சாா்பாக சையத்பாரூக் போட்டியிடுகின்றனா். இவா்களுடன் தவெக, நாம்தமிழா் உள்பட 15 போ் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை திருப்பலி முடிந்து வந்த கிறிஸ்தவா்களிடம் ஓரே நேரத்தில் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத்பாரூக், தவெக பேரூா் செயலாளா் தங்கமணி மற்றும் நாம் தமிழா் கட்சியினா் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.

ஓரே நேரத்தில் 4 கட்சிகளை சோ்ந்தவகளும் ஓரே இடத்தில் கூடி வாக்கு சேகரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், ஐயூஎம்எல் வேட்பாளா் சையத் பாரூக்கை கடந்து சென்ற போது இருவரும் பரஸ்பரம் வாழ்த்தினா்.

அப்போது நகர திமுக செயலாளா் சாரதிகுமாா், பேரூா் திமுக செயலாளா் செல்வராஜ் ஆகியோரிடமும் அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா் வாழ்த்தி பேசினாா்.