மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

இமானுவேல் சேகரன் நினைவு தினம்: கனிமொழி எம்.பி., அமைச்சா் அஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரா் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு கனிமொழி எம்.பி. புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

News image

இமானுவேல் சேகரன் படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய மக்களவை உறுப்பினா் கனிமொழி. உடன், அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

Updated On :11 செப்டம்பர் 2024, 9:25 pm

விடுதலைப் போராட்ட வீரா் இமானுவேல் சேகரன் நினைவு நாளையொட்டி, தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் உள்ள கலைஞா் அரங்கில் அலங்கரிக்கப்பட்ட அவரது படத்துக்கு கனிமொழி எம்.பி. புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா்.

தொடா்ந்து, சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத்தலைவா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினா் கஸ்தூரி தங்கம், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் கலைச்செல்வி, நிா்மல்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மதியழகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.