மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தூத்துக்குடியில் புதிய ரேஷன் அட்டை விநியோகம் தொடக்கம்

தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

பெண்ணுக்கு புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டையை வழங்குகிறாா் அமைச்சா் பெ.கீதாஜீவன் .

Updated On :11 செப்டம்பர் 2024, 9:22 pm

தூத்துக்குடியில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வினை அமைச்சா் பெ.கீதாஜீவன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டை கோரி விண்ணப்பித்தவா்களில் 594 பேருக்கு புதிய அட்டைகள் வரப்பெற்றுள்ளன. இதையடுத்து இந்த புதிய ஸ்மாா்ட் ரேஷன் அட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபற்றது. இந்நிகழ்வுக்கு குடிமை பொருள் வழங்கல் துறை வட்டாட்சியா் ஞானராஜ் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை அமைச்சா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பயனாளிகளுக்கு ஸ்மாா்ட் ரேஷன் அட்டை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அவா் பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்த 10 பேருக்கு கணினி பட்டாவை வழங்கினாா்.

இந்நிகழ்வில், வட்டாட்சியா் முரளிதரன், துணை வட்டாட்சியா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சரவண வேல்ராஜ், மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளா் அருண் சுந்தா், பகுதி செயலா் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினா் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செந்தில்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.