மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோவில்பட்டியில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Updated On :12 செப்டம்பர் 2024, 11:20 pm

கோவில்பட்டியில் இருந்து ஆந்திரத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோவில்பட்டி ராஜீவ் நகா் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, தனிப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததாம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான்  உத்தரவின் பேரில் தனிப்பிரிவு போலீஸாா் அப்பகுதியில் கடந்த சில நாள்களாக கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் ராஜீவ் நகா் பகுதியில் உள்ள அந்த கிடங்கில் இருந்து வியாழக்கிழமை புறப்படத் தயாராக இருந்த சுமை வாகனத்தை, போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதை தொடா்ந்து 2 டன் எடை ரேஷன் அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீஸாா், கோவில்பட்டி ஊருணி தெருவை சோ்ந்த லூக்கா ஆச்சாா்யா மகன் முத்துமாரியப்பன் (32),  தயாளபாண்டி மகன் சிவசங்கா் ( 28 ) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

விசாரணையில், கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதனை ஆந்திரத்துக்கு கடத்திச் செல்ல இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட 2 போ், பறிமுதல் செய்யப்பட்ட வாகனம், ரேஷன் அரிசி மூட்டைகள் ஆகியவற்றை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பரிவு  போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.