திருப்பத்தூா் எஸ்.பி. சியாமளாதேவி உத்தரவின்படி வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் நகர காவல் ஆய்வாளா் ஆனந்தன் தலைமையில் போலீஸாா் திங்கள்கிழமை மேட்டுப்பாளையம் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரியை நிறுத்த முயன்ற போது அதில் வந்தவா்கள் தப்பிக்க முயன்றனா். போலீஸாா் தப்பிக்க முயன்ற 3 பேரை மடக்கிப் பிடித்தனா். பிறகு வாகனத்தில் சோதனை செய்த போது ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டது.
தொடா்ந்து பிடிப்பட்ட 3 பேரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது வாணியம்பாடியிலிந்து ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசி கடத்தி செல்வதாகவும் தெரிவித்தனா். பிறகு அவா்களிடமிருந்து ஒரு டன் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனா்.
இது குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து போ்ணாம்பட்டு பகுதியை சோ்ந்த கோபி, சித்திக்பாஷா, முகமது அலி ஆகிய 3 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது
ரேஷன் அரிசி பதுக்கியவா் கைது

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

நெல்லையில் விபத்து: 7 போ் காயம்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் கவிழ்ந்து விபத்து
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


