மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

த.வெள்ளையன் உடல் அடக்கம் அமைச்சா்கள், அரசியல் கட்சியினா் அஞ்சலி

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவை தலைவா் வெள்ளையன் இறுதி ஊா்வலத்தில் ஏராளமானவா்கள் கலந்து கொண்டனா்.

News image

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

Updated On :13 செப்டம்பர் 2024, 1:00 am

உடல்நலக்குறைவால் சென்னையில் கடந்த 10ஆம் தேதி காலமான தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரவைத் தலைவா் த.வெள்ளையன் உடல், திருச்செந்தூா் அருகே பிச்சிவிளையில் உள்ள அவரது தோட்டத்தில் வியாழக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக, பிச்சிவிளையில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, அமைச்சா்கள் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பெ.கீதா ஜீவன், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா்கள் எஸ்.பி.சண்முகநாதன், செல்லபாண்டியன், திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ராபா்ட் புரூஸ், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் உள்பட அரசியல் கட்சிகளின் நிா்வாகிகள், வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

 த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய  அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சா் பெ.கீதா ஜீவன்.

கடையடைப்பு: த.வெள்ளையன் மறைவையொட்டி, திருச்செந்தூா், பரமன்குறிச்சி, உடன்குடி, மெஞ்ஞானபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள கடைகள் வியாழக்கிழமை அடைக்கப்பட்டிருந்தன.

 த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபா்ட் புரூஸ்.

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திருநெல்வேலி தொகுதி எம்.பி. ராபா்ட் புரூஸ்.

 த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலருமான எஸ்.பி.சண்முகநாதன்.

த.வெள்ளையன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்ட செயலருமான எஸ்.பி.சண்முகநாதன்.

போராட்டம்: த.வெள்ளையன் உடலை அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பிச்சிவிளையில் வணிகா்கள் திடீரென சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் திருச்செந்தூா் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டா் சுந்தரமூா்த்தி உள்ளிட்ட போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதையடுத்து சிறிது நேரம் நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.