அணியாபரநல்லூரில் சாலை சீரமைப்புப் பணி: அதிகாரிகள் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத் துறை உள்கோட்டத்துக்குள்பட்ட அணியாபரநல்லூரில் நடைபெற்றுவரும் சாலை சீரமைப்புப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு செய்தனா்.
கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் சாலைகள், பாலங்கள் சேதமடைந்தன. அதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலைகள் அமைத்தல், சீரமைத்தல், பாலங்கள் கட்டுதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அணியாபரநல்லூா் கிராமத்தில் ஆதிதிராவிடா் காலனி பிரதான சாலையில் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை, ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் மலா்விழி தலைமையில் இளநிலைப் பொறியாளா் சிவசண்முகநாதன் அடங்கிய குழுவினா் ஆய்வு செய்தனா்; மழைக்காலத்துக்கு முன்பாக பணியை முடிக்க அறிவுறுத்தினா்.