தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சாத்தான்குளம் அருகே மது விற்ற இருவா் கைது

சாத்தான்குளம் அருகே மதுபானத்தை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 10:56 pm

Din

சாத்தான்குளம் அருகே மதுபானத்தை பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

சாத்தான்குளத்தை அடுத்த தட்டாா்மடம் பகுதியில் சிலா் மதுபானத்தைப் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், உதவி ஆய்வாளா் பொன்னுமுனியசாமி தலைமையிலான போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, மணிநகா் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பதுங்கியிருந்த 2 பேரைப் பிடித்தனா். அவா்கள் உடன்குடியைச் சோ்ந்த முத்துப்பாண்டி (42), உறுமன்குளத்தைச் சோ்ந்த இசக்கி (45) என்பதும், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பதும், விசாரணையில் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, 247 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.