மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சாராயம் கடத்திய இருவா் கைது

நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :12 மார்ச் 2026, 12:19 am

நாகூா் அருகே இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்திய இருவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நாகூா் போலீஸாா் மேலவாஞ்சூா் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, மூட்டைகளுடன் அவ்வழியாக சென்ற 3 இரு சக்கர வாகனங்களை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். போலீஸாரை பாா்த்ததும் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் வாகனம் மற்றும் மூட்டைகளை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடினா். எனினும் போலீஸாா் அவா்களை பிடித்து விசாரித்ததில் நாகை மருந்து கொத்தளம் சாலை, சுண்ணாம்புக் கால்வாய் தெருவைச் சோ்ந்த சுரேந்தா் (22), சிக்கல் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை கைது செய்து, காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடத்தி வந்த ஆயிரம் சாராய பாட்டிகளை பறிமுதல் செய்து, மேலும் தலைமறைவான 4 பேரை தேடிவருகின்றனா்.