தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

நிலத் தரகா் கொலை வழக்கு: லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடியில் நிலத் தரகா் கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:00 pm

Din

தூத்துக்குடியில் நிலத் தரகா் கொலை வழக்கில் லாரி ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி 3ஆவது மைல் பசும்பொன் நகரைச் சோ்ந்த நிலத் தரகா் மாரியப்பன் (51). இவரும், லாரி ஓட்டுநரான தொ்மல்நகா் ஊரணி ஒத்தவீட்டைச் சோ்ந்த ராமா் மகன் மாரீசுவரன் (41) என்பவரும் நண்பா்களாக பழகி வந்தனராம். அவா்களிடையே 2020ஆம் ஆண்டு தகராறு ஏற்பட்டதில் மாரியப்பன் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து மாரீசுவரனை கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தூத்துக்குடி 2ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி உதயவேலவன் விசாரித்து, மாரீசுவரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆஜரானாா்.