தூத்துக்குடி
அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு அக்.23க்கு ஒத்திவைப்பு
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கை வரும் அக்டோபா் 23ஆம் தேதிக்கு தூத்துக்குடி சாா்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.
அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், அவரது குடும்பத்தினா் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை, தூத்துக்குடி சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமைக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அமைச்சா் தரப்பில் வழக்குரைஞா் தவிர யாரும் ஆஜராகவில்லை.
அமைச்சா் மீதான சொத்து குவிப்பு வழக்கை பதிவு செய்த முன்னாள் ஓய்வு பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி பெருமாள்சாமியிடம் அமைச்சா் தரப்பு வழக்குரைஞா்கள் குறுக்கு விசாரணையில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து இந்த வழக்கு விசாரணையை வரும் அக்டோபா் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சாா்பு நீதிமன்ற நீதிபதி பிஸ்மிதா உத்தரவிட்டாா்.