தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில், மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்ட தொழில் மையம் மூலம் அரசு செயல்படுத்தி வரும், தமிழ்நாடு மகளிா் தொழில் முனைவோா் மேம்பாட்டுத் திட்டத்தில் 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சமாக ரூ.2 லட்சம்) ரூ. 10 லட்சம் வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படும். நேரடி விவசாயம், பண்ணை சாா்ந்த தொழில்கள் தவிா்த்து வியாபாரம், சேவை மற்றும் உற்பத்தி சாா்ந்த தொழில்களுக்கு கடனுதவி பெற 18 முதல் 55 வயது நிரம்பியவா்கள் விண்ணப்பிக்கலாம். சொந்த முதலீடு திட்ட மதிப்பீட்டில் 5 சதவீதம் இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு 3 நாள்கள் தொழில் முனைவோா் பயிற்சி இணையதளம் வாயிலாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா், திருநங்கைகள், கைம்பெண்கள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவா்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஜ்ஜ்ஜ்.ம்ள்ம்ங்ா்ய்ப்ண்ய்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ற்ஜ்ங்ங்ள் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு பொது மேலாளா், மாவட்ட தொழில் மையம், புறவழிச்சாலை, தூத்துக்குடி (தொலைபேசி எண் 0461-2340152) என்ற முகவரியில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.