சஷ்டி வழிபாடு: திருச்செந்தூரில் பக்தா்கள் சுவாமி தரிசனம்
காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
காா்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு சுவாமி விஸ்வரூபம் தரிசனம், 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை, அதைத்தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை வழியாக சென்று சுவாமி தரிசனம் செய்தனா். மாலையில் சுவாமி ஜெயந்திநாதா் வள்ளி, தேவசேனா அம்மனுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி பிரகாரம் சுற்றிவந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

