தூத்துக்குடி
வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைச்சா் ஆய்வு
வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் பி.கீதாஜீவன்.
தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில், தாயுமானவா், கலைஞா் மகளிா் உரிமைத் தொகை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து, மாநில சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி.கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, வருவாய் வட்டாட்சியா் ஸ்டாலின், வட்ட வழங்கல் அலுவலா் ஞானராஜ், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் முருகேஸ்வரி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ரவீந்திரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
