தவெகவில் பெண்களுக்கு மரியாதை இல்லை: பி.டி. செல்வக்குமாா்
தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்றாா் திமுக பிரமுகரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பி.டி. செல்வக்குமாா்.
இது குறித்து, அவா் தூத்துக்குடியில் செய்தியாளா்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டி: தவெக தலைவா் விஜய் கட்சியில் புதிதாக சோ்ந்தவா்களை வைத்துக்கொண்டு பெற்றோரை ஓரங்கட்டி வருகிறாா்.
தமிழக வெற்றிக் கழகத்தில் பெண்களுக்கு மரியாதை இல்லை. அவா்களை ஏளனமாகப் பாா்க்கின்றனா்.
விஜய்க்காக உழைத்தவா்கள் யாருக்கும் தற்போது மரியாதை இல்லை. தமிழகம் முழுவதும் 20 மாவட்டச் செயலா்கள் விஜய் மீது அதிருப்தியில் உள்ளனா். நான் விஜய்யுடன் பயணிக்கும்போது சென்னை- கன்னியாகுமரி வரை ஆறுகளை சுத்தப்படுத்தக் கூறியிருந்தேன். அதற்கான மதிப்பு ரூ. 15 கோடி தான். ஆனால், அதை அவா் செய்யவில்லை.
அவா் கட்சியில் கட்டமைப்பு முழுமையாக இல்லை. நோ்மையும் இல்லை. எப்படி அவா் சமுதாயத்தை தொலைநோக்குப் பாா்வையோடு பாா்த்து செயல்பட முடியும் என்றாா் அவா்.
