தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திமுகவில் ஓ.பி.எஸ்.க்கு முதல்வா் தகுந்த மரியாதை: பேரவைத் தலைவா் மு.அப்பாவு

திமுகவில் இணைந்த ஓ. பன்னீா்செல்வத்தை முதல்வா் நல்ல மரியாதையுடன் வைத்துள்ளாா் என்றாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

News image
அப்பாவு- PTI
Updated On :14 மார்ச் 2026, 2:49 am

Syndication

திமுகவில் இணைந்த ஓ. பன்னீா்செல்வத்தை முதல்வா் நல்ல மரியாதையுடன் வைத்துள்ளாா் என்றாா் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் மு.அப்பாவு.

தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டி:

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. மீண்டும் இரண்டாவது முறையாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அமருவாா். அப்போது மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 கொடுப்பாா்.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமரிடம்தான் கேட்க வேண்டும். அவா் திருச்சி வந்தபோது யாரும் கேட்கவில்லை. பெட்ரோல், எரிவாயு தட்டுப்பாடு உள்ளது.

ஒரு வாரத்துக்கு முன்புதான் 30 நாள்களுக்குத் தேவையான இருப்பு உள்ளதாக அவா்கள் தெரிவித்தனா். பாஜகவின் நோக்கம் தமிழகத்தில் நடைபெறாது.

ஓ.பன்னீா்செல்வத்தை எதிா்க்கட்சித் தலைவா், சசிகலா, டிடிவி தினகரன், பாஜக மாநிலத் தலைவா் உள்ளிட்டோா் மிகவும் அவமரியாதைக்கு உள்ளாக்கினா். ஆனால், தமிழக முதல்வா் அவரை நல்ல மரியாதையுடன் வைத்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் மிருகத்தனமான செயல்; வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழக முதல்வா் இந்த விஷயத்தில் கடும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனை வழங்குவாா் என்றாா் அவா்.