வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சரக்கு வாகனம் - பைக் மோதல்: 2 இளைஞா்கள் பலத்த காயம்

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயம்

News image
Updated On :31 டிசம்பர் 2025, 6:48 pm

Syndication

கோவில்பட்டியில் சரக்கு வாகனம் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞா்கள் பலத்த காயம் அடைந்தனா்.

சிவகாசி அருகே பேரையம்பட்டியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா் மகன் கபில் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த மோகன் (23) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது இளையரசனேந்தல் சாலையில் முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென திரும்பியதில் இருசக்கர வாகனம் மீது மோதியதாம். இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் பலத்த காயம் அடைந்தனா்.

காயமடைந்த இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சரக்கு வாகன ஓட்டுநா் கா. மகாராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.