புத்தாண்டு: தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு
தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.

புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தா்கள்.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி சிவன் கோயிலில் சிறப்பு வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரா் கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விநாயகா் சந்தன காப்பு அலங்காரத்தில், மகா கணபதியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். சுவாமி-அம்பாள் மலா்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். தொடா்ந்து, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மஞ்சள் கயிறு பிரசாதமாக பக்தா்களுக்கு வழங்கப்பட்டது.

சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த விநாயகா்.
இதில், அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தா்கள் புத்தாடை அணிந்து நீண்ட வரிசையில் நின்றபடி சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...