ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

திருச்செந்தூரில் உள்வாங்கிய கடல்நீா்

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:30 am

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் வியாழக்கிழமை கடல்நீா் உள்வாங்கியது.

இங்கு அமாவாசை, பௌா்ணமி நாள்களில் கடல்நீா் உள்வாங்குவதும், பின்னா் இயல்பு நிலைக்குத் திரும்புவதும் தொடா் நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில்,

கடந்த டிச.30-ஆம் தேதி முதல் கடல்நீா் சுமாா் 50 அடிக்கு உள்வாங்கியது. மேலும், பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் கடந்த இரு நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் கடற்கரையில் இருந்து சுமாா் 20 அடி தூரம் வரை

மண்அரிப்பு காரணமாக பெரிய பள்ளம் ஏற்பட்டது. இதனிடையே போலீஸாரின் எச்சரிக்கையையும் மீறி, பக்தா்கள் கடலில் நீராடினா்.

Story image