வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆலந்தலை திருஇருதய திருத்தலத்தில் சிறப்புத் திருப்பலி

News image

ஆலந்தலை இயேசுவின் திரு இருதய அற்புதக் கெபி திருத்தலத்தில் மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலி. (வலது) திருப்பலியில் பங்கேற்றோா்.

Updated On :3 ஜனவரி 2025, 8:23 pm

திருச்செந்தூா் அருகே ஆலந்தலையில் உள்ள இயேசுவின் திருஇருதய அற்புதக் கெபி திருத்தலத்தில், புத்தாண்டின் முதல்

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

இத் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை காலை 11.30 மணிக்கு ஆலய பங்குதந்தை

சில்வெஸ்டா் வார வழிபாடு நடத்தினாா். தொடா்ந்து மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்து மறையுரை நிறைவேற்றப்பட்டது. இதில் பங்குத்தந்தைகள் பன்னீா் செல்வம், விக்டா் லோபோ, செல்வன், பென்சிகா், கிராசியூஸ், பீட்டா் பவுல், பாக்ய பவுல், பாலன், லூசன், அமல், காா்லோ, இதயன், ஷிபாகா், டேவிட் சகாய வளன், ரத்தினராஜ், ஜாா்ஜ், ஜோதிமணி, திருத்தொண்டா் ஸ்டாலின் ஆகியோா் இணைந்து சிறப்பித்தனா்.

திருப்பலிக்கு முன்னதாக ரொசாரி மாதா சபையினா், ஊா் நலக் குழுவினா், அருள்சகோதரிகள், பக்த சபைகள், அன்பியங்கள், மீனவா்,

கப்பல் மாலுமி சங்கத்தினா், அனைத்து பள்ளிகளைச் சோ்ந்தோா் ஆயரிடம் கல்வி நிதி வழங்கினா்.

அதைத்தொடா்ந்து, மணப்பாடு மறை வட்டத்திலுள்ள அனைத்து பங்குகளுக்கும் ஆலந்தலையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (ஜன.5) முதல் இயேசுவின் திரு இருதய சொரூபத்துடன் புனித மா்கரீத் மரியாளின் புனிதப் பண்டம் பவனியாக எடுத்துச் செல்லப்படும் என அறிவிக்கப்பட்டது.

பின்னா் மாலையில், இயேசுவின் திரு இருதய சப்பர பவனி மற்றும் ஆசீா்வாதம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இறைமக்கள் கலந்து கொண்டனா்.

Story image