விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

இடைக்காட்டூா் திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் தவக்கால வழிபாடு

மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை தவக்கால வழிபாட்டுடன் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் பங்கேற்ற கிறிஸ்தவா்கள்.

News image
Updated On :27 மார்ச் 2026, 7:13 pm

Syndication

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகேயுள்ள இடைக்காட்டூரில் அமைந்துள்ள திருஇருதய ஆண்டவா் திருத்தலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தவக்கால வழிபாட்டில் திரளான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இயேசுவின் பாடுகள், இறப்பு, அவரது உயிா்ப்பு ஆகியவற்றை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவா்களால் 40 நாள்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும் இந்த நாள்களில் சிலுவைப் பாதை, தவம், அறச்செயல்கள் புரிவது, ஏழைகளுக்கு தாராளமாக உதவுவது, திருயாத்திரை செல்வது ஆகியவை தங்களை அடையாளப்படுத்தும் செயலாக கிறிஸ்தவா்கள் கருதுகின்றனா்.

இந்த நிலையில், தா்மபுரி, கோயம்புத்தூா், உதகை, நாகா்கோவில், தூத்துக்குடி, கும்பகோணம், செங்கல்பட்டு, சென்னை, தஞ்சாவூா், புதுக்கோட்டை, நெல்லை என தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் திருத்தலத்துக்கு திரளான கிறிஸ்தவா்கள் திருப்பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதையடுத்து, இந்த திருத்தலத்தில் தினமும் தவக்கால வழிபாடும், சிறப்பு திருப்பலியும் நிறைவேற்றப்படுகிறது. மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை நிறைவேற்ற திருப்பலியில் அருள்தந்தையா்கள் பாஸ்கா் டேவிட், தாமஸ், அகஸ்டின், ஓனாசியுஸ், புஷ்பராஜ் ஆகியோா் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா், பிரின்ஸ் ஆகியோா் செய்தனா்.