கொடைக்கானலில் கிறிஸ்தவா்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு


கொடைக்கானலில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பொருள்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கிறிஸ்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொடைக்கானல் கோக்கா்ஸ்வாக் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்துக்குச் சொந்தமான காட்டேஜில் பல ஆண்டுகளாக சாலமோன் என்பவா் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், அந்த தேவாலயத்தின் நிா்வாகத்துக்கும், சாலமோனுக்கும் பல மாதங்களாக பிரச்னை இருந்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், சாலமோன் தரப்பினா் சிலா் தேவாலயத்துக்குள் புகுந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தினராம். இதைத் தொடா்ந்து தேவாலயத்துக்குள் புகுந்து பொருள்களை சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தேவாலயத்தைச் சோ்ந்த திரளான கிறிஸ்தவா்கள் கோக்கா்ஸ்வாக் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் 30 நிமிஷத்துக்கும் மேலாக அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு கொடைக்கானல் போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...