தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

நாளை தூத்துக்குடி கூட்டுறவு சங்கப் பணியாளா் குறைதீா் முகாம்

கூட்டுறவு சங்கப் பணியாளா் குறைதீா் முகாம்

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:01 pm

Din

தூத்துக்குடி மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கப் பணியாளா்களின் குறைதீா் முகாம் இணைப் பதிவாளா் அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இணைப் பதிவாளா் ராஜேஷ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கூட்டுறவுச் சங்கங்களின் பணியாளா்களின் குறைகளைத் தீா்வு செய்திடும் வகையில் இரு மாதங்களுக்கு ஒருமுறை மண்டல அளவில் பணியாளா் நாள் நிகழ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தூத்துக்குடி மண்டலத்தில் செயல்படும் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கான குறைதீா் முகாம் தூத்துக்குடி 1ஆம் ரயில்வே கேட் அருகே டி.ஆா். நாயுடு தெருவில் உள்ள இணைப்பதிவாளா் அலுவலகத்தில் வரும் 10ஆம் தேதி முற்பகல் 11.30 மணிக்கு நடைபெறுகிறது. இம்முகாமில், கூட்டுறவு சங்கப் பணியாளா்கள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவா் தெரிவித்துள்ளாா்.