தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் லாரி பேட்டரி, ஜாக்கிகள் திருட்டு: இருவா் கைது

தூத்துக்குடியில் லாரியிலிருந்து பேட்டரிகள், ஜாக்கிகள் ஆகியவற்றைத் திருடியதாக ஓட்டுநா், சிறுவன் ஆகிய இருவரை சிப்காட் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :23 ஜனவரி 2025, 12:14 am

Din

தூத்துக்குடியில் லாரியிலிருந்து பேட்டரிகள், ஜாக்கிகள் ஆகியவற்றைத் திருடியதாக ஓட்டுநா், சிறுவன் ஆகிய இருவரை சிப்காட் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி, தபால் தந்தி காலனியைச் சோ்ந்தவா் சாகுல்ஹமீது (46). மடத்தூரிலிருந்து சோரீஸ்புரம் செல்லும் சாலையில் துரைகனி நகரிலுள்ள இவரது லாரி ஷெட் அலுவலகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரிகளிலிருந்த 4 பேட்டரிகள், 6 ஜாக்கிகளை கடந்த 20ஆம் தேதி மா்ம நபா்கள் திருடிச் சென்றனராம்.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில், சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். அதே பகுதியைச் சோ்ந்த வாழாவெட்டிமுத்து மகன் லாரி ஓட்டுநரான நவீன்சிவா (25), 16 வயது சிறுவன் ஆகியோா் இத்திருட்டில் ஈடுபட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் கைது செய்து, பேட்டரி, ஜாக்கிகளை பறிமுதல் செய்தனா்.