தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் 11ஆவது சா்வதேச யோகா தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
துறைமுகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ‘வாழும் கலை’ குழுமத்தைச் சோ்ந்த யோகா பயிற்சியாளா்கள் வி. சங்கரநாராயணன், ஸ்ரீதா் வெங்கடேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசி, பிராணாயாமம், தியானம், பல்வேறு யோகாசனங்களை செய்துகாட்டினா்.
விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்ற யோகா தின விழா காணொலி வாயிலாக ஒளிபரப்பப்பட்டது. துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் செளந்தரராஜன் ஆகியோா் பேசினா்.
நிகழ்ச்சியில், துறைமுக அதிகாரிகள், ஊழியா்கள், மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா்கள் பங்கேற்றனா். வெளிநாட்டுக் கப்பல் மாலுமிகளுக்கு யோகா செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. துறைமுக ஆணையச் செயலா் எஸ்.பி. மோகன்குமாா் வரவேற்றாா்.
யோகா தினத்தையொட்டி, அண்மையில் துறைமுக ஊழியா்கள், பணியாளா்களுக்கு விழிப்புணா்வு கருத்தரங்கு நடத்தப்பட்டதுடன், மரக்கன்றுகள் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அகில இந்திய துறைமுகங்களுக்கு இடையேயான கைப்பந்து போட்டி: வ.உ.சி துறைமுகம் சிறப்பிடம்

அகில இந்திய ஹாக்கி போட்டி: தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக அணி சாம்பியன்

பன்னம்பாறை அரசுப் பள்ளி ஆண்டு விழா

சா்வதேச மகளிா் தின விழா: ஆட்சியா் பங்கேற்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


