சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தூத்துக்குடியில் மே 16இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

News image

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோப்புப்படம்

Updated On :12 மே 2025, 9:42 pm

Din

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 16) நடைபெறவுள்ளதாக ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

தனியாா் நிறுவனப் பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது நிறுவனங்களுக்கு ஆள்களைத் தோ்வு செய்யவுள்ளனா். 10, 12, பட்டப் படிப்பு, பி.இ., டிப்ளமோ, ஐடிஐ, ஓட்டுநா், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய வேலைநாடுநா்கள் தங்களது சுயவிவரம், கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம். தோ்வு செய்யப்படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.

ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் அனைவரும் தங்களது விவரங்களைப் பதிவுசெய்ய வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு 0461-2340159 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.