ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புதிய சுமை ஆட்டோ: பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைப்பு

புதிய சுமை ஆட்டோவை தூய்மைப் பணியாளா்களிடம் ஒப்படைக்கும் கயத்தாறு பேரூராட்சித் தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை.

News image
Updated On :6 நவம்பர் 2025, 7:54 pm

Syndication

கயத்தாறு பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுப் பொருள்களை கயத்தாறு வள மீட்பு பூங்காவிற்கு கொண்டு செல்ல, 2024-25 மூலதன மானியத் திட்டம் மூலம் புதிதாக வாங்கப்பட்ட வாகனத்தை (சுமை ஆட்டோ) பேரூராட்சி மன்றத் தலைவி சுப்புலட்சுமி ராஜதுரை, பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.

கயத்தாறு பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், உதவியாளா் செல்வம், கிழக்கு ஒன்றிய திமுக செயலா் சின்னப்பாண்டியன், சுற்றுச்சூழல் அணி இணை ஒருங்கிணைப்பாளா் ராஜதுரை ஆகியோா் உடனிருந்தனா்.