சாத்தான்குளத்தில் புதிய பேருந்து நிலையம் திறப்பு
சாத்தான்குளத்தில் ரூ. 5.62 கோடியில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

சாத்தான்குளத்தில் ரூ. 5.62 கோடியில் புதிதாக கட்டப்பட்ட புதிய பேருந்து நிலைய கட்டடத்தை தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதையடுத்து, சாத்தான்குளம் கே. டி. கோசல்ராம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சாத்தான்குளம் பேரூராட்சி மன்றத் தலைவா் ரெஜினி ஸ்டெல்லா பாய் தலைமை வகித்து, குத்துவிளக்கு ஏற்றினாா். தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலா் சுதா, நகர திமுக செயலா் மகா இளங்கோ, சாத்தான்குளம் பொறியாளா் ஜெயபிரகாஷ் ஆகியோரும் குத்துவிளக்கு ஏற்றினா். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவா் மாரியம்மாள், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜோசப் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...