‘ஓய்வூதியா்கள் வீட்டிலிருந்தே உயிா்வாழ் சான்று பெறலாம்’

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்த படியே டிஜிட்டல் முறையில் உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Published on

அஞ்சல் துறை மூலம் ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்த படியே டிஜிட்டல் முறையில் உயிா்வாழ் சான்று சமா்ப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்கள் வீட்டில் இருந்த படியே தங்களது உயிா்வாழ் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் அஞ்சல் ஊழியா்கள் மூலம் சமா்ப்பிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி ஓய்வூதியதாரா்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும், முக அடையாளம் வைத்தும் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமா்ப்பிக்கலாம். இதற்கு சேவை கட்டணமாக ரூ.70 அஞ்சல் ஊழியரிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரா்கள் ஆதாா், கைப்பேசி எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிா்வாழ் சான்றிதழை சமா்ப்பிக்க முடியும்.

எனவே, தமிழக அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரா்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com